• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடகோவை பகுதியில் உள்ள கடிகார கோபுரம் முன்பாக கடிகார நாள் கொண்டாட்டம்

November 14, 2022 தண்டோரா குழு

ரவுண்ட் டேபிள் இந்தியா தினம் சார்பாக கோவையில் நடைபெற்ற விழாவில்,வடகோவை பகுதியில் உள்ள கடிகார கோபுரம் முன்பாக கடிகார நாள் கொண்டாடப்பட்டது.

வடகோவை மேம்பாலத்தின் கீழ் உள்ள கடிகார கோபுரம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ரவுண்ட் டேபிள் இந்தியா தினத்தை முன்னிட்டு இந்த கடிகார கோபுரத்தின் முன்பாக ஆர்.டி.ஐ கடிகார கோபுரம் நாள் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ரவுண்ட் டேபிள் இந்தியா சார்பாக வட கோவையில் கடிகார கோபுரம் நாள் கொண்டாட்டப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக ரவுண்ட் டேபிள் இந்தியா தேசிய தலைவர் மனீஷ் லகோடியா கலந்து கொண்டார்.மேலும் விழாவில், கோவையின் மற்றும் ஏரியா செவன் கிளை தலைவர்கள் மற்றும் பிற பகுதி வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து,நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் குறித்த பிரச்சார வாகனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வாகனம் கடந்த செப்., 11ம் தேதி, ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் துவங்கியதாகவும், நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 136 ரவுண்ட் டேபிள் அமைப்பு கிளைகள் உள்ள நகரங்களுக்கு இந்த வாகன பயணம் சென்று,.வரும் டிசம்பர் 16ம் தேதி, ராஞ்சியில் முடிவடைய உள்ளதாக ரவுண்ட் டேபிள் இந்தியா நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க