• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடக்கு, கிழக்கு, மேற்கு மண்டல பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை

September 10, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல பகுதிகளில் 9 இடங்களில் ரூ.4 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், நகர்நல மையம், பொதுக்கழிப்பிடம், மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 18வது வார்டுக்குட்பட்ட நல்லாம்பாளையம், ராமசாமி நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினையும், 19வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ. 99 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியினையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து துவக்கி வைத்து 82 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

மேலும் அப்பள்ளியிலுள்ள கழிப்பறைகள் சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து வடக்கு மண்டலம் 26வது வார்டுக்குட்பட்ட பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கழிப்பிடம் கட்டும் கட்டுமான பணியினையும், 25வது வார்டுக்குட்பட்ட காந்திமா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பொதுகழிப்பிடம் கட்டுமான பணியினையும், 10வது வார்டுக்குட்பட்ட ராமானந்தா நகர் மற்றும் எஸ்.பி.எஸ்.நகரில் ரூ. 29 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினையும், ஷாஜகான் நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியினையும், கிழக்கு மண்டலம் 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மா நகர், அம்பாள் நகர் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டுமானப்பணியினையும், மேற்கு மண்டலம் 16வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ரூ.74 லட்சத்து 95ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டுமான பணியினையும் என மொத்தம் ரூ.4 கோடியே 79 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப்பணிகளை பூமிபூஜை செய்து துவக்கி வைத்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக, கிழக்கு மண்டலம் 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மா நகரில் மாநகராட்சி தள்ளுவண்டி தூய்மைப் பணியாளர்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளுக்கு தள்ளுவண்டிகளுக்கான புதிய குப்பைத் தொட்டிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மண்டல குழு தலைவர்கள் கதிர்வேல், தெய்வயானை தமிழ்மறை, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், பணிகள் குழு தலைவர் சாந்தி முருகன், கவுன்சிலர்கள் ராதா கிருஷ்ணன், சித்ரா வெள்ளியங்கிரி, கதிர்வேலுசாமி, ராமமூர்த்தி, பழனிசாமி (எ) சிவா, பூங்கொடி சோமசுந்தரம், பாபு, மணியன், விஜயகுமார், தமிழ்செல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க