September 7, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டல பகுதிகளில் தூய்மை பணிகள் மற்றும் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 20வது வார்டுக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் பூங்கா ஆகியவற்றை ஆய்வு செய்த மேயர் கல்பனா ஆனந்தகுமார் அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் 26வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தின் எடைகளை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வரும் பணிகளையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் (பொ) ஷர்மிளா, வடக்கு மண்டல குழு தலைவர் கதிர்வேல், உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் பலர் உடனிருந்தனர்.