February 11, 2022
தண்டோரா குழு
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் தேபாசிஸ் பொரியா (34).இவர் கோவை இடையர் வீதியில் தங்கியிருந்து நகைப்பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில்,அவரது சொந்த ஊரில் சொத்து பிரச்னை காரணமாக அவரது பெற்றோருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.இதனால், மன உளைச்சல் அடைந்த தேபாசிஸ் பொரியா வாழ்க்கையில் விரக்தியடைந்து தான் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்து சம்பவயிடத்துக்கு சென்று போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இது தொடர்பாக வெறைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கோவை கணபதி 7வது தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (65). இவர் கடந்த மாதம் 25ம் தேதி மூச்சுத்திணறல் உள்ளதாக, கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.அவரை பரிசோதனை செய்த போது, விஷம் அருந்தியது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.