• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடவள்ளியில் இரவு நேரங்களில் திருடர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைப்பதால் அதிர்ச்சி

July 5, 2022 தண்டோரா குழு

கோவை வடவள்ளி அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில்,தற்போது அதிகளவில் இரவு நேரங்களில்,திருடர்கள் அடுத்தடுத்து கடைகளில் பூட்டை உடைப்பதால், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பாக,வடவள்ளி காவல் நிலையத்தில், புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது,அந்த மனுவில் வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய்,போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்திவரும் நிலையில்,இரவு நேரங்களில் உலா வருகின்ற மர்ம நபர்கள்,கடையை நோட்டமிட்டு, கடையின்பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், எடுத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில்,கடந்த 3ம்தேதி,அதிகாலை 3 மணியளவில் கணுவாய் பகுதியில்,உள்ள ஒரு பேன்சி கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வடவள்ளி, வியாபாரிகள் சம்மேளனத்தினர் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணியில்,அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறுகுறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபடும் என்றும் தெரவித்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க