October 25, 2023 தண்டோரா குழு
கோவை வடவள்ளி அடுத்த முல்லை நகர் பகுதியில் கழிவுநீர் சாக்கடையில் சிக்கிய பசுமாடு கன்று குட்டியை ஈன்று, உயிரைவிட்டது தனியாக கத்திய கன்றுகுட்டியை கடித்து கொன்ற நாய்களால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
கோவை வடவள்ளி அடுத்த முல்லைநகர் பகுதியில், கழிவுநீர் செல்லும் ஓடை உள்ளது, இந்த ஓடையில் நேற்று தெரியாமல் இறங்கிய பசுமாடு, இந்த கழிவு நீரில் சிக்கி கொண்டது, வெளிவர முடியாமல் தவித்த பசுமாடு கன்று குட்டியை ஈன்றது, ஆயினும் அந்த பகுதியில் இருந்து வெளி வர முடியாமல் சிக்கி கொண்ட மாடு உயிரிழந்தது, இதனை தொடர்த்து அந்த பகுதியில் உள்ள நாய்கள் பிறந்த கன்றுக்குட்டியை கடித்து கொன்றது, இதனை இன்று கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து அப்பகுதியின் கவுன்சிலர் சாந்தி சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த கவுன்சிலர், இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், கயிறுகட்டி இறங்கி உயிரிழந்த மாட்டையும் கன்றுக்குட்டியையும் மேலே கொண்டு வந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்,
வடவள்ளி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன், மாநகராட்சி மேற்பார்வையாளர் முத்து ராஜ், தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள், உடனடியாக ஜேசிபி வாகனம் வரவழைக்கப்பட்டு அதே பகுதியில் குழி தோண்டி பசுமாட்டையும் கன்றுக்குட்டியையும் புதைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.