• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வட மாநில தொழிலாளிகள் சொந்த ஊருக்கு படையெடுப்பு – சைமா வருத்தம்

March 4, 2023 தண்டோரா குழு

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளிகள் சொந்த ஊருக்கு படையெடுப்பு, தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதாக தென்னிந்திய நூற்பாலை கள் சங்கத்தினர் (சைமா)வருத்தம் தெரிவித்துள்ளனர்.

உத்திரபிரதேசம் ஜார்காண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநிலத்தோர் கோவையில் உள்ள பஞ்சலைகளைகள், சிறு குறு தொழிற்சாலைகள்,உணவகங்கள், கட்டிடம் கட்டும் பணியில் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும்,தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில்வைரலாக பரவி வருகிறது.இதனால் தங்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுத்து செல்ல துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கோவையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர்(சைமா) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

பஞ்சாலை தொழிற்சாலைகளில் 60% வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.இதனால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்சாலைகளில் அனைத்து விதமான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளதாக தெரிவித்த அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என ஹிந்தி மொழியில் பேசி வட மாநிலத்தவர்களுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் வட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படுவதால் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லவார்கள் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க