• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வணிகர் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம்

May 6, 2022 தண்டோரா குழு

வணிகர் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறோம் வர்த்தகர் தினவிழாவில் கோவை மாவட்ட வர்த்தக சங்கம் தலைவர் முத்துப்பாண்டி கூறியுள்ளார்.

கோவை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வர்த்தகர் தினவிழா நீலம்பூர் ஸ்ரீதேவி ஜெயம் ஹாலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார்.பொதுச்செயலாளர் முத்து ராமலிங்கம்,பொருளாளர் சாமுவேல் ராஜ், செயலாளர்கள் ராஜன் பாஸ்கரன் அவைத் தலைவர் தேவராஜ் தகவல் தொடர்பு தலைவர் காளிதாஸ் திட்டக்குழு தலைவர் பழனிச்சாமி வெளியுறவு துறை தலைவர் செல்வின் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்தி தொடர்பாளர் தனிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.விழாவை ஆனந்தம் முதியோர் இல்லம் பாதுகாவலர் பானுமதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக அரசூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோவிந்தராஜ்,முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேலு,அருண் ஸ்டில்ஸ் உரிமையாளர் முத்துப்பாண்டி,டூவீலர் மெக்கானிக் அண்ட் ஆட்டோ கன்சல்டிங் அசோசியேசன் மாவட்ட தலைவர் கபூர்கான், கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் சட்ட ஆலோசகர் விஜய் ஆனந்த் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணைத்தலைவர்கள் ஆறுச்சாமி, பழனிச்சாமி, சத்யநாராயணா,துணை செயலாளர்கள் நாராயணன்,ஆனந்த்,மாணிக்கராஜ் ,பால் லிங்கம்,செல்வின் ஆகியோர் உட்பட கௌரவ ஆலோசகர்கள் செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர். பிறந்த நடைபெற்ற விழாவில் தலைமை தலைவர் முத்துப்பாண்டி பேசும்போது இந்த சங்கம் முழுக்க முழுக்க வணிகர்களின் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.

கொரோனா பேரிடர் காலத்தில் துப்புரவு பணியாளர்கள் உட்பட பலருக்கு உணவு, கபசுரநீர் ,தினமும் சுண்டல் ஆகியவற்றை நாம் வழங்கினோம். இந்த கோடை காலம் துவஙகியது முதல் 100 நாட்கள் நீர்மோர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தை துவக்கி 64 நாட்களை தற்போது கடந்து உள்ளோம். இன்னும் பல்வேறு பொதுமக்கள் சார்ந்த நலத் திட்டங்கள் அனைத்தையும செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். இன்னும் வரும் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து நமது சங்கத்தை அனைவரும் வலுவடைய செய்ய வேண்டும் என்றார்.

குறுகிய காலத்தில் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விழாவாக இருந்தாலும் சிறப்பான முறையில் நடைபெற்று உள்ளது என்றார்.இந்த விழாவில் சின்னியம்பாளையம் கிளை தலைவர் சுடலைமணி,செயலாளர் முத்து, பொருளாளர் ரமேஷ், அவை பொறுப்பாளர் ஜெபராஜ், காட்டம்பட்டி தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன்,பொருளாளர் ஜெப சீலன் மற்றும் தென்னம்பாளையம் பகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு கோவை மாவட்ட வர்த்தக சங்கத்தின் துணைத்தலைவர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க