November 20, 2024
தண்டோரா குழு
ATM மையங்களில் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ATM அட்டையை மாற்றி கொடுத்து பணத்தை ஏமாற்றிய நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல் துறையினர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 07.11.2024 தேதி முருகம்மாள் (45) என்பவர் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ATM-ல் எடுக்க சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு ATM-ல் பணம் எடுக்க தெரியாததால் அங்கிருந்த அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் அவரது ATM கார்டு மற்றும் PIN நம்பரை கொடுத்து பணம் எடுத்து தர சொல்லியதாகவும், அப்போது அந்த கார்டை பெற்று ATM-ல் போட்டுவிட்டு உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று சொல்லியதாகவும் பின்னர் கார்டை கீழே தவரவிடுவதுபோல் போட்டு வேறு ATM கார்டை கொடுத்து சென்றதாகவும் பின் தனது கார்டை பயன்படுத்தி வேறு வங்கி ATM Machine ரூபாய் 9000/- பணம் எடுத்து மோசடி செய்துள்ளார் என தெரிய வந்து முருகம்மாள் (45) வால்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.மேற்படி வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன்விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடி வந்த நிலையில்,இன்று (20.11.2024) கேரள மாநிலத்தைச் சேர்ந்த சைனபா தெற்கே மகன் நஜுப்(36) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி மோசடி வழக்கில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
மேற்கண்ட எதிரியானவர் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் ATM மையங்களில் சென்று வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு வேறு ATM கார்டை கொடுத்துவிட்டு பின்பு ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தது தெரிய வந்தது.இந்நிலையில் மேற்படி நஜீப் (36) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 43 போலியான ஏடிஎம் கார்டுகள் மற்றும் சுமார் ரூபாய் 5290/- பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.