December 2, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் பூமிதான நிலவிநியோகம் பெற்று,விவசாயம் செய்து வரும் பயனாளிகள் அரசின் அனைத்து திட்டங்களையும் தடையின்றி பெறும் வண்ணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிசம்பர் 2ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமில் மின்னிணைப்பு, நிவாரணம், தடையின்மைச்சான்று, கடனுதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடர்பான மனுக்கள் பெறப்படவுள்ளது. இம்முகாமில் அனைத்து பூமிதான நிலவிநியோகதாரர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.