June 10, 2017
தண்டோரா குழு
செல்ல பிராணியான நாயின் உதவியால் முதியோர்களுக்கு நல்ல ஆரோக்கியம் தருவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
செல்ல பிராணிகளான நாய்களின் உதவியால் முதியோர்களுக்கு நல்ல உடல் செயல்திறனை தருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டின் நாய்களைக் கொண்ட 43 உரிமையாளர்கள் செயல்திறன் மற்றும் கட்டுப்பாடான நடத்தையை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். ஏப்ரல் 2௦13 முதல் நவம்பர் 2௦14 இடையே நடந்த ஒரு வார தகவல் சேர்ப்பில் காலக்கட்டத்தில் பங்கேற்றவர்கள் எத்தனை நிமிடம் அவர்களால் நடக்க முடிகிறது, நிற்க முடிகிறது, உட்கார முடிகிறது என்று அவர்களுடைய செயல் திறன்களை கண்காணித்தனர்.சோதனையின் முடிவில், நாய்களை வைத்திருந்த முதியவர்கள் அதிகம் நடக்க முடிந்தது என்று தெரிய வந்துள்ளது.
இது குறித்து ஆய்வின் முன்னணி எழுத்தாளர் பிலிப்பா டால் கூறுகையில்,
“நாய்களை வைத்திருக்கும் 65 வயது முதியவர்கள், 22 நிமிடங்களில் 2,76௦ காலடிகளை எடுத்து வைத்து நடக்கின்றனர்” என்று தெரிவித்தார்.
“சிறந்த வாழ்வாரத்திற்கும், மேம்படுத்தப்பட்ட அல்லது பராமரிக்கப்படும் அறிவாற்றல் மற்றும் நீண்ட நாள் வாழ்க்கைக்கு முதியவர்களுக்கு உதவுகிறது” என்று மற்றொரு ஆய்வு எழுத்தாளர் நான்சி கீ தெரிவித்தார்.