February 21, 2022 தண்டோரா குழு
வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை என்றால் தடுத்து நிறுத்துவோம் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவை சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளிக்க வந்துருந்தனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடத்திடவும், முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று மனு அளிக்க வந்துருந்தனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி வேலுமணி, கிணத்துக்கடவு தாமோதரன், கவுண்டம்பாளையம் அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ஜூனன், சிங்காநல்லூர் ஜெயராம், சூலூர் கந்தசாமி, மேட்டுப்பாளையம் செல்வராஜ் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
பின்னர் பந்தயசாலையில் அமைந்துள்ள விருந்தினர் மாளிகையில் தேர்தல் நடத்தும் சிறப்பு அதிகாரி நாகராஜனிடம் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டியில்,
கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்திராத பிரச்சினை கலவரம் கரூர்,சென்னை குண்டர்கள் வைத்து நிகழ்ந்து இருக்கின்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரு தினம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.தேர்தலில் கலவரத்தை உண்டு பண்ணி பணம், பொருட்கள் கொடுத்தை கண்டித்து போராட்டம் நடத்தினோம். 9 பேர் மீதும் வழக்கு போட்டார்கள் மேலும் ஒவ்வொரு வார்டிலும் கரூர், சென்னை ரவுடிகள் இருந்து பண விநியோகம் செய்ததாக குற்றச்சாட்டு வைத்தார்.
பின்னர் மாவட்டத்தில் மோசமான சூழ்நிலையை உருவாக்கினர். இது தொடர்பாக ஆட்சியர், சிறப்பு தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் மனு அளித்தோம் என்றார்.மேலும் அதிகாரிகளை மிரட்டி திமுக தோற்றாலும் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கபடுகின்றனர் என தகவல்கள் வந்துள்ளதாகவும் முதல்வர் அலுவலகத்தில் இருந்தே பேசுகின்றனர்.
மோசமான ஜனநாயக படுகொலை செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். நீதிமன்ற அறிவுறுத்தல்களை அதிகாரிகள் கடைபிடிக்க வில்லை எனவும் இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மனு அளிக்கபட்டது. மேலும் முதல்வரின் மகன் உதயநிதி கடைசி நாள் பிரச்சாரத்தில்வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார். ஊழலை பற்றி பேசும் தகுதி உதயநிதிக்கு கிடையாது. உதயநிதி குடும்பமே ஊழல் இருந்து வந்தது எனவும் தாத்தாவில் இருந்து இப்போது வரை அனைவரும் ஊழலில் திளைத்தவர்கள் என்றார்.
உதயநிதி பிறந்தது முதல் ஊழலில் இருந்து வந்தவர் எனவும் சாவுமணி அடிப்பேன் என்ற வார்த்தயை உதயநிதி சொல்லி இருக்கின்றார் அதை முதல்வர் மகன் இப்படி ஒரு மோசமான வார்த்தையை பேசி இருக்கின்றார். ஆனால் முதல்வர் இந்த விவகாரத்தில் மகனை கண்டிக்க வில்லை.முதல்வருக்கும், உதயநிதிக்கும், இங்கு இருக்கும் அமைச்சருக்கும், கலவரம் செய்தாதவது திமுகவை ஜெயிக்க வைக்க பார்க்கின்றனர் என தெரிவித்தார்.
நீதிமன்றம் இதை பார்த்து கொண்டு இருக்கின்றது நாளை வாக்கு எண்ணிக்கை சரியாக நடக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகுவோம் எனவும் வாக்கு எண்ணிக்கை சரியாக நடவில்லை என்றால் இந்த பிரச்சனை விடமாட்டம் எனவும் முறையாக நடக்கவில்லை என்றால் தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும் எங்கள் போராட்டம்அரசியல் நாடகமா ? கரூர், சென்னையில் குண்டர்கள் இருந்தார்களா என்பது மக்களுக்கு தெரியும். மக்கள் நல்ல தீர்ப்பு கொடுப்பார்கள் எனவும் இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், செயலாளருக்கும், உள்துறை அமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.