May 22, 2023 தண்டோரா குழு
தமிழக மக்கள் விடுதலை கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில்,,
கோவை மாவட்டத்தில் வாடகை வீடுகளின் எண்ணிக்கையை அரசாங்கம் தொகுக்க வேண்டும் எனவும் வாடகை வீடுகளில் வாடகை தொகையை சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் சாதி மதம் கேட்டு வாடகை வீடு தரமறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக பட்டா வழங்கபடாமல் இருக்கும் பொது மக்களின் வீட்டு வாடகை செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு கோவை மாவட்ட வாடகைக்கு குடியிருப்பு சங்கத்தின் பொது செயலாளர் வெள்ளிமலை தலைமையில் வழங்கப்பட்டுள்ளது.