April 17, 2017 தண்டோரா குழு
உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம் கொண்டுள்ள வாட்ஸ் அப் செயலி வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப அவ்வபோது பல மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அந்நிறுவனம் தற்போது புதிய வசதியை அப்டேட் செய்துள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்கள் தவறுதாலாக ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி விடுவார்கள். இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அப்டேடில் ஒருவருக்கு நாம் அனுப்பும் மெசேஜை தேவை இல்லையெனில் ஐந்து நிமிடங்களுக்குள்ளாக அதை அன் சென்ட் மற்றும் எடிட் செய்யும் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மெசேஜ் அனுப்பும் பொது அதில் சில குறிப்பிட்ட எழுத்துகளை மேற்கோள் செய்து காட்டுவதற்கு Italic மற்றும் Bold ஸ்டைலில் டைப் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தபடவுள்ளது. தற்போது சோதனையில் உள்ள இந்த பதிப்பானது விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப்பில் 2.17.148 என்ற வெர்ஷனை அப்டேட் செய்து இந்த புதிய வசதியை பெறலாம்.