May 9, 2017 தண்டோரா குழு
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் என்ற செயலியை இன்று உலகம் முழுவதும் 120 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர்.
பயனாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு அந்நிறுவனமும் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பரில்வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியைவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.இதன்மூலம், உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 34 கோடி நிமிடத்துக்கு வீடியோ கால் செய்யப்படுவதாகவும் இதில் இந்தியர்கள் 5 கோடி நிமிடத்தை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜன்கோயும் கூறும்போது,
வீடியோ காலிங் வசதி இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான தேவை என்றும் இதை அறிமுகப்படுத்தியதன் மூலம் தங்களது நிறுவனம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.