April 7, 2016 தண்டோரா குழு
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மெசேஜ் ஆப் வாட்ஸ்ஆப், மெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ளது. வாட்ஸ்ஆப் மென்பொருளைச் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது அந்நிறுவனம்.
இதில் சமீபத்தில் வாட்ஸ் ஆப் மென்பொருளில் குரூப் சாட்டில் 100 நபர்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற நிலையில் இருந்து 256 ஆக உயர்த்தியது. அதைப் போல் பல புதிய வசதிகளையும், மாற்றங்களையும் செய்து வந்தது. இந்நிலையில் தற்போது (Encryption) எனப்படும் மறையாக்கம் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் நாம் ஒருவருக்கு அனுப்பும் தகவல், புகைப்படம், வீடியோ என எதுவாக இருந்தாலும் மறையாக்கம் செய்யப்பட்டே பகிரப்படும். இதனால் நாம் மற்றவர்களுக்கு அனுப்பப்படும் தகவல்களை யாரும் இடை மறித்து ஹேக் செய்ய முடியாது.
இதன் மூலம் நமது தகவல்கள் வாட்ஸ் ஆப் நிறுவத்தை இடைமறித்து யாராலும் பார்க்க முடியாது. எனினும் இந்த வசதியைப் பெற தற்போது நாம் பயன்படுத்தும் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் இந்த என்கிரிப்சன் எனப்படும் மறையாக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதை இந்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் பரவிவருகின்றன.
அதோடு இந்த வசதியை நிறுவனம் விலக்கிக்கொள்ளாவிட்டால் வாட்ஸ் ஆப் இந்தியாவில் தடைசெய்யப்படும் எனவும் தகவல் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் வாட்ஸ் ஆப் வாடிக்கையாளர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது.