May 22, 2023 தண்டோரா குழு
அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும்,எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்துகொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் ‘வானவில் மன்றம்’ திட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் மூலம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நுண்கலை, விளையாட்டு, அறிவியல் உள்ளிட்ட 6 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில அளவில் 150 மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவுக்காக வெளிநாட்டு பயணத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கடந்த நிதியாண்டிற்காக போட்டிகளில், தமிழகம் முழுவதும் 150 மாணவ,மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கோவை எல்லப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் கவின்.வானவில் போட்டியில் பைக் போம் வாஸை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவன் கவின் கூறும்போது ,
வெளிநாட்டு செல்வது என்பதே பலருக்கும் கனவாகவே இருக்கும் எனக்கும் அதே போன்று தான் இருந்தது.தற்போது இந்த வானவில் மன்றம் மூலம் என் கனவு நிறைவேறிவிட்டது. எங்கள் பள்ளிக்கு வானவில் மன்றத்தின் சார்பாக வருபவர்கள் கற்றுக் கொடுப்பதை கண்டு எனக்கும் கண்டுபிடிப்பின் மீது ஆர்வம் வந்தது. அதன் முயற்சியாகதான் இந்த பைக் போம் வாஸரை கண்டுபிடித்துள்ளேன். இதற்காக எனது பெற்றோர்,ஆசியர்கள், பள்ளி கல்வி துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.