December 14, 2017 தண்டோரா குழு
சீனாவில் ஒரு வாலிபனின் காதில் சுமார் 26 கரப்பான்பூச்சிகளை இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தென் சீனாவிலுள்ள கோங்டாங்மாகணத்தை சேர்ந்தவர் 19 வயது வாலிபன் லீ. அவருக்கு திடீரென காதில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் டாங்கோங் நகரிலுள்ள சாங் அ ஸியாவோபியான் மருத்துவமனைக்கு சென்று, தனது பிரச்சனையை அங்கிருந்த மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர்களும் அவருக்கு பரிசோதனை செய்தனர்.
அப்போது, அவருடைய காதில் ஒரு அடைப்பு இருப்பதை கவனித்த மருத்துவர்கள் அதை வெளியே எடுத்தபோது, அவருடைய காதில் சுமார் 26 கரப்பான்பூச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மருத்துவர்கள் ‘Electro optoscope’கருவி மூலம், அவருடைய காதை பரிசோதித்த போது, ஒரு பெண் கரப்பான்பூச்சி அவருடைய காதில் எப்படியோ நுழைந்து, அதில் சுமார் 25 முட்டைகள்யிட்டு, அவருடைய காதில் இருந்தது தெரியவந்தது. உடனே, அவருடைய காதை தண்ணீரால் சுத்தப்படுத்தி, அதிலிருந்த கரப்பான்பூச்சிகளை அகற்றினர்.
“லீ மட்டும் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வராமல் இருந்திருந்தால், அவருடைய காது முழுவதும் சேதம் அடைந்து, அவருக்கு கேட்டும் திறன் முழுவதும் இழந்திருக்ககூடும்” என்று லீக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.