November 29, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டம் வால்பாறையில் பத்தாண்டுகளாக இயற்கை உரக்கிடங்கு செயல்படாமல் உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை ஸ்டேன்மோர் சாலை சந்திப்பு பகுதியில் கடந்த 2008-09 திமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு, வால்பாறையில் உள்ள 21 நகராட்சிகளிலிருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்டது.இத்திட்டம் துவங்கிய போது மட்டும் செயல்பட்ட இந்த உரக்கிடங்கு, கடந்த பத்தாண்டுகளாக செயல்படாமல் உள்ளது.
மேலும் அனைத்து வார்டுகளிலிருந்து குப்பைகள் கொண்டு வந்து உரக்கிடங்கில் கொட்டி வைக்கப்படுகிறது. தற்போது டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டும், அவை தரம் பிரக்கப்படாமலும், இயற்கை உரம் தயாரிப்பதற்கான பணிகள் நடைபெறாததால் தொடர்ந்து குப்பைகள் தேங்கி அந்த பகுதிகளில் கடுமையான நுர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும்,பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய ஸ்டேன்மோர் சாலை சந்திப்பு அருகே பாரதியார் பல்கலைகழக கல்லூரி மற்றும் கடைகள் அமைந்துள்ளது.இத்திட்டமானது வால்பாறையில் தேங்கும் அனைத்து குப்பைகளையும் சேகரித்து, அதனை தரம் பிரித்து இயற்கை உரமாக தயாரித்து அதை தேயிலை தோட்டங்களில் பயன்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது.
ஆனால்,தற்போது அவை செயல்படுத்தபடாமல் இருப்பதால் குப்பைகள் டன் கணக்கில் சேருவதோடு, நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.