March 21, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவிற்குள் நுழைய ஈரான், லிபியா, சூடான், சோமாலியா, ஏமன், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடை உலகல அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிருந்து ஐபாட், மடிக்கணினி ஆகியவை எடுத்துவர அமெரிக்க தடை செய்துள்ளது.
இது குறித்து அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கையில்,
“அமெரிக்காவிலிருந்து 1௦ சர்வதேச விமான நிலையங்களுக்கு பயணமாகும் விமானங்களில் ஐபாட், சிறிய மின்னணு சாதனங்கள், மடிக்கணினி, கேமராக்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்ல அமேரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால் கைபேசி மற்றும் மருந்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதியுண்டு.” என்றது.
மார்ச் 21-ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது என அமேரிக்கா அறிவித்துள்ளது. இந்த தடைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.