• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயகாந்திற்கு எதிராகப் போர் கொடி தூக்கியவர்கள் கட்சியில் இருந்து நீக்கம் விஜயகாந்த் அதிரடி.

April 5, 2016 தண்டோரா குழு.

விஜயகாந்தின் கூட்டணி நிலைப்பாடு தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரானது எனவும் விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை மாற்றவேண்டும் என தே.மு.தி.க. ‌கொள்கை பரப்பு செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எஸ்.சேகர் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் போர் கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் தலைமையின் முடிவை விமர்சித்துப் பேசிய சந்திரகுமார்

எம்.எல்.ஏ. உட்பட 10 பேரும் தேமுதிக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக கேப்டன் விஜயகாந்த் அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழக கொள்கை பரப்பு செயலாளர் வி.சி சந்திர குமார், துணை செயலாளர் முருகேசன், உயர்மட்ட குழு உறுப்பினர் வீரப்பன், திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் என்.கார்த்திகேயன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் இமயம் சிவகுமார், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.செந்தில் குமார், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொருளாளர் செஞ்சி சிவா ஆகியோர் கழகத்தின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கேட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும், திருவள்ளுவர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக ஏ.வி. ஆறுமுகம், திருவண்ணாமலை வடக்கு கழக பொறுப்பாளராக பாபு முருகவேல் எம்.எல்.ஏ, வேலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீதர், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பி.ஆனந்தபாபு, ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக பி.கே. சுப்பிரமணி, ஈரோடு தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பா.கோபால் ஆகியோருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக விஜயகாந்த் அந்த அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

அதே சமயம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ விஜயகாந்துக்கு எதிராக பேச ஒவ்வொருவருக்கும் தி.மு.க சார்பில் மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

தே.மு.தி.க எம்.எல்.எ மோகன்ராஜ் பேசும்போது, அவர்கள் அனைவரும் வெளியேறியதால் தே.மு.தி.கவிற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அதற்கு பதிலாக நல்லவர்கள் பலர் இந்த கட்சிக்கு வருவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க