March 28, 2022 தண்டோரா குழு
விஜய் மக்கள் இயக்கத்தின்,வாராந்திர சமூக பணி விழாவை முன்னிட்டு,விஜய் மக்கள் கோவை தெற்கு நகர இளைஞரணி சார்பாக 20 அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் தெற்கு நகர இளைஞரணி பல்வேறு சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.இந்நிலையில் தெற்கு நகர இளைஞரணி சார்பாக தன்னலம் பாராமல் சமூக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக நினைவு பரிசு வழங்கி பாராட்டும் விழா கோவை சுகுணா புரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
தெற்கு நகர இளைஞரணி தலைவர் பைசல் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளர்களாக விஜய் மக்கள் இயக்க இளைஞரணி மாவட்ட தலைவர் யுவராஜ் மற்றும் சமூக ஆர்வலர் அருட்செல்வர் இந்தியன் வுட் ஒர்க்ஸ் குப்புராஜ்,மாவட்ட இளைஞரணி கவுரவ தலைவர் ராம்குமார்,பொறுப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியை,ஆரம்ப மற்றும் உயர்நிலைபள்ளி என அரசு பள்ளிகளை சேர்ந்த 20 ஆசிரியைகளுக்கு வெள்ளி நாணயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு நகர இளைஞரணி பொருளாளர் இரும்பு கடை அக்கீம்,செயலாளர் முகம்மது அலி,மற்றும் நிர்வாகிகள் சிவபாலன் ரமேஷ்,சந்தோஷ்,ஆஷிக்,மகேந்திரன், கார்த்திக், மெர்சல் செந்தில் மற்றும்,தினேஷ்குமார், மகேஷ்,செல்வம்,சதீஷ்,கிரண்,விவேக்,நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.