July 21, 2017 தண்டோரா குழு
புனேவில் சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றாமல் அங்குள்ள மக்கள் கைபேசியில் புகைப்படமும் எடுத்து கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா புனே நகரை சேர்ந்த 25 வயது மென்பொருள் பொறியாளர், சதீஸ் பிரபாகர் மேடே, புனே இந்திராநகர் பகுதியில் சாலை விபத்தில் சிக்கிக்கொண்டார். அங்கிருந்த மக்கள் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்ய முன் வராமல் கைபேசியில் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஒருவர் சாலை விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்ய ஆட்டோவை நிறுத்தியுள்ளார். நிலைமையை அறிந்துக்கொண்ட அந்த ஆட்டோ ஓட்டுநர், தன்னுடைய வாகனத்தில் இருந்தவர்களை கீழே இறக்கிவிட்டு, சதீஷை ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் சதீஷ்க்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சைக்கு பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கியிருந்த அவரை சுற்றியிருந்த மக்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு வந்திருந்தால், சதீஷ்யின் உயிரை நிச்சயம் காப்பற்றி இருக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புனே நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.