April 14, 2016 வெங்கி சதீஷ்
இந்தியாவில் உள்ளவர்கள் ஒன்று அன்புக்கு அடிமையாக இருப்பார்கள் அல்லது பக்திக்கு அடிமையாக இருப்பார்கள்.
இதைவிட இறக்ககுணம் என்று வந்துவிட்டால் என்ன ஏது என விசாரிக்காமல் உதவுவதற்கு முன் வருபவர்கள் தான் இந்தியர்கள். ஆனால் அவர்களது அந்த ஈகை குணம் தற்போது வெளிநாட்டுப் பயணிகளிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது என்பது வேதனையான விசயம்.
விமான நிலையத்தில் காத்திருப்போர் அறையில் எப்போதும் படிப்பதற்கு புத்தகங்களும், அருகே தங்களது கருத்துக்களைச் சொல்ல ஒரு பெட்டியும் வைக்கப்பட்டிருக்கும். அதில் விமான நிலையம் குறித்த கருத்துக்களையும் புகார்களையும் அதில் போட்டால் அதை அதிகாரிகள் நிவர்த்தி செய்வார்கள்.
ஆனால் அந்தப் பெட்டியில் பயணிகள் சிலர் பணத்தைப் போட்டுள்ளனர். அதாவது படிக்கும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு பணத்தைப் போட்டனரா அல்லது அந்தப் பெட்டியில் சின்னதாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புகார் பெட்டி என்பதைப் பார்க்காமல் உதவி கேட்கும் பெட்டி என நினைத்துப் போட்டனரா எனத் தெரியவில்லை.
ஆனால் அந்தப் பெட்டியில் அடுத்தடுத்து விழுந்த பணம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது மூன்று விசயங்களைத் தெரியப்படுத்துகிறது. ஒன்று மக்களின் இறக்கக் குணம். இரண்டாவது அருகில் உள்ள புத்தகத்தை விற்பனைக்கு என நினைத்திருந்தால் அதற்கான பணம் செலுத்தியதன் மூலம் நேர்மையை விளக்குகிறது.
அல்லது எதுவும் இல்லாமல் இருந்தால் தனது சொந்த மொழியில் கட்டாயம் குறிப்பு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதில் எது என விமான நிலைய அதிகாரிகள் அறிந்து அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது ஆசை.