October 4, 2017 தண்டோரா குழு
விருதுநகரில் தமிழக அரசின் அவசரகால 108 சேவை அவசரகால மேலாண்மை ஆய்வு கழகத்தின் ஆம்புலன்சில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் அவசரகால 108 சேவை அவசரகால மேலாண்மை ஆய்வு கழகத்தின் ஆம்புலன்சில் ஓட்டுனர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது.ஓட்டுனர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், வயது வரம்பு 24 முதல் 35 வரை இருக்கவேண்டும்.மேலும்,இலகுரக வாகனம் ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டு முடிந்து, பேட்ஜ் உரிமம் பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டி.எம்.எல்டி, டி பார்ம் அல்லது வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள் பி. எஸ்சி. விலங்கியல், தாவரவியல்,உயிர்வேதியல், நுண்ணுயிரியல் 12ஆம் வகுப்பிற்கு பிறகு ஓராண்டு அரசு கல்லூரியில் இ.எம்.டி.டெக்னிசியன் (எலும்பியல், சுவாசமண்டல அறுவைசிகிச்சை அரங்க உதவியாளர்) சான்று பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30 வரை தகுதி உள்ளவர்கள் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் 06.10.2017 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் தேர்வில் பங்குகொள்ளலாம்.