April 25, 2017 தண்டோரா குழு
அரசு நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியதாவது;
“அனைத்து அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் அரசு சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துகளுக்கு தடை விதிக்க வேண்டும்.ஜெர்மனி நாட்டின் சுகாதார அமைச்சர் பார்பரா ஹென்ரிக்ஸ் அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளில் இறைச்சி விருந்துக்கு தடை செய்துள்ளார். அவருடைய எடுத்துக்காட்டை இந்தியா பிரதமரும் பின்பற்ற வேண்டும்.பருவநிலை மாற்றத்திற்கு இறைச்சி தாயரிப்பு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
உணவிற்காக விலங்குகளை வளர்ப்பதால் நிலம் மற்றும் உணவு வளங்களை இழக்க நேர்கிறது. இறைச்சியை தடை செய்வதால் சுற்றுசூழல் பாதுகாப்பு குறித்து அதிக அக்கறை காட்டும் நாடாக இந்தியா திகழும் என்பதில் ஐயம் இல்லை”
இவ்வாறு பீட்டா அமைப்பு கூறியுள்ளது.