March 3, 2016 NDTV
ரயிலுக்குள் நுழையும் போது ஏர் ஹோஸ்டஸ் போல ரயில் ஹோஸ்டஸ் வந்து உங்களை வரவேற்றால் எப்படி இருக்கும்?
அது மட்டுமல்லாமல் இன்னும் பல புதிய சிறப்பு அம்சங்களுடன் கிட்டத்தட்ட விமான வசதிக்கு இணையான ஒரு ரயில் அல்ல – 9 ரயில்கள் வரப்போகின்றன. இவற்றைப் பற்றி அறிவிப்பு பிப்ரவரி 25 ந்தேதி வரும் ரயில் நிதிநிலையில் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
என்னென்ன வசதிகள்?
முதன் முதலாக 160 கிமீ வேகத்தில் ஓடப்போகும் ரயில்
அதிக சக்தி வாய்ந்த பிரேக் வசதிகள்
ஜி பி எஸ் வழியான பயணிகள் தகவல் தொடர்பு அமைப்பு
நேரடித் தொலைக் காட்சி
மிகத் தரமான இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு
பயணிகளே அவர்கள் உணவைத் தேர்ந்தெடுக்கும் வசதி – கோதுமை உப்புமா, சிறு தோசை – நறுக்கிய பழங்கள், குல்சா, ஸ்விஸ் ரோல், உலர்ந்த பழங்கள், சிக்கன்,ஸ்பானிஷ் முட்டை, ஆம்லெட், கேக் போன்ற விதவிதமான உணவு பீங்கான் தட்டுகளில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
முழுதும் குளிர்சாதன வசதியுடன் ஷதாப்தியை விட 25% அதிகக் கட்டணத்தில் இந்தப் பதிய ரயில் வர இருக்கிறது.
முதலில் டெல்லிக்கும் ஆக்ராவிற்கும் இடையே அறிமுகப்படுத்தப்படும் ‘கதிமான் (அதிவிரைவு?) எக்ஸ்பிரஸ்’ அடுத்த மாதம் வரத் தயாராக இருக்கிறது.
இது டில்லி -ஆக்ரா 200 கிமீ தூரத்தை 105 நிமிடங்களில் கடக்கும். தற்போது ஷதாப்தி இந்தத் தூரத்தை 120 நிமிடங்களில் கடக்கிறது) .
இதையும் மற்ற 9 ரயில்களையும் பச்சைக் கொடி காட்டி வரவேற்போம் !