March 10, 2025
தண்டோரா குழு
கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர்களில் ஒருவரான கே.ஜி குழுமத்தின் டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் (டி.என்.சி.டி) தனது முதல் பிரீமியம் வில்லா திட்டமான லக்ஸ் டவுனை கோயம்புத்தூர் காளப்பட்டி சாலையில் உள்ள நேரு நகரில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்து வைத்தது.
இந்த திட்டத்தை டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜி.கண்ணப்பன், இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார் உடன் இணைந்து துவக்கி வைத்தார்.
சுரேஷ்குமார், மூத்த துணைத் தலைவர்; மற்றும் ஜோசுவா, டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு தலைவர் இந்த அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொறியாளர் ஜெயகோபால் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்தப் வில்லா குடியிருப்பு திட்டம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சஞ்சனா விஜயகுமார், இதுவரை 4,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீட்டு கனவுகளை தங்களுடைய குடியிருப்பு அடுக்குமாடி திட்டங்களின் மூலம் நிறைவேற்றிய பிறகு, டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் இப்போது வில்லா திட்டங்களிலும் கால் பாதித்துள்ளது என குறிப்பிட்டார்.
“கோயம்புத்தூரில் நாங்கள் 18 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட திட்டங்களை இதுவரை வெற்றிகரமாக கட்டி முடித்துள்ளோம். எங்கள் நிறுவனத்தின் கீழ் இன்னும் 7 வெவ்வேறு குடியிருப்பு மற்றும் வணிக வளாக திட்டங்கள் தயாராகி வருகின்றன,” என்று தெரிவித்தார்.
காளப்பட்டி சாலையில் உள்ள நேரு நகரில் அமைந்துள்ள வில்லா திட்டமான ‘லக்ஸ் டவுன்’,நேர்த்தியையும், நுட்பத்தையும், இணையற்ற பிரீமியம் வாழ்க்கையையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
முற்றிலும் பிரீமியம் தரத்துடன் வரும் இந்த வில்லா திட்டத்தில் நவீன வசதிகள், கலைநயமிக்க வடிவமைப்புகள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பையும் தனித்துவத்தையும் உறுதி செய்துள்ளதாக கூறினார்.
இந்த திட்டத்தில் மொத்தம் 25 பிரம்மாண்ட 3BHK ( 3 பெட்ரூம், ஹால், கிட்சன்) வில்லாக்கள் அடங்கும். இவை மூன்று வெவ்வேறு வகைகளில் வாடிக்கையாளர்களுக்காக தயாராகி வருகிறது. ரூ. 2.25 கோடியில் இருந்த இதன் விலை தொடங்குகிறது.
நேரு நகர் பகுதி என்பது கோவை மக்கள் அனைவருக்கும் நன்கு அறியப்பட்ட ஒரு வேகமாக வளரக்கூடிய ஒரு பகுதியாகும். இதன் அருகே பிரபல பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் சென்டர்கள், தகவல் தொழில்நுட்ப மையங்கள், பல சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு வளாகங்கள் மிகவும் நெருக்கத்தில் உள்ளது.
கோவையின் பிரதான சாலைகளை இங்கிருந்து எளிதில் அணுக முடியும். மேலும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் அருகிலேயே இந்த திட்டம் உருவாகி வருகிறது. இது போன்ற பல சிறப்பு அம்சங்கள் இந்த திட்டத்தில் உள்ளது. இன்று முதல் இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகியுள்ளது.
மேலும் தகவலுக்கு, 766 76 999 99 மற்றும் 766 74 666 66 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.