June 30, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் யூடியூபில் பிரபலம் அடைய வேண்டும் என்று எடுத்த முயற்சியின் போது காதலனை சுட்டுகொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மின்னேசொடா மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோனோலிசா பெரேஸ்(19) மற்றும் அவருடைய காதலர் பெட்ரோ ரூஸ்(22). சமூக வலைத்தளமான யூடியூபில் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணமாக அவ்வப்போது பல சாகசங்களை செய்து வந்துள்ளனர். இதுவரை சுமார் 18 சாகச காணொளிகளை யூடியூபில் பதிவிட்டிருந்தனர்.
புதிய சாகசமாக பெரிய புத்தகத்தை நெஞ்சில் வைத்து, அதை துப்பாக்கியால் சுடும்போது, துப்பாக்கி தோட்டா நெஞ்சில் விழாது என்பதை நிருபிக்க நினைத்தனர். இதையடுத்து, ரூஸ் தடினமான Encyclopaedia புத்தகத்தை தனது நெஞ்சில் வைத்துக்கொண்டு, தனது காதலியின் கையின் துப்பாக்கியை தந்து அவரை சுடுமாறு கூறியுள்ளார். நடக்கப்போகும் விளைவை அறியாத மோனோலிசா அவருடைய நெஞ்சை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக, துப்பாக்கி தோட்ட புத்தகத்தை ஊருடுவி பாய்ந்து, ரூஸ் நெஞ்சில் பாய்ந்துள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சத்தம் கேட்ட அருகிலிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். அவர்கள் அங்கு வந்தபோது, ரூஸ் இறந்துபோய் இருப்பதை கண்டு, சந்தேகத்தின் பேரில், மோனோலிசாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து மோனோலிசா 7,௦௦௦ டாலர் அபராதம் கட்டி புதன்கிழமை ஜாமீனில் வெளி வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நடத்திய சோதனையில், சம்பவத்தில் பயன்படுத்திய 5௦ காலிபர் துப்பாக்கி மோனோலிசா ரூஸ் வீட்டின் அருகில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
“மோனோலிசா மற்றும் பெட்ரோ ஒருவர் மீது ஒருவர் அதிக அன்புடன் இருந்தனர். அவர்களுடைய 3 வயது குழந்தை இந்த சம்பவத்தை பார்த்துள்ளது. இந்த காரியத்தை பெட்ரோ செய்திருக்ககூடாது. விளையாட்டு வினையாகியது. மோனோலிசா தற்போது 5 மாத கர்ப்பிணி பெண்” என்று பெட்ரோவின் அத்தை தெரிவித்தார்.
“ஆபத்தான காணொளி ஒன்றை ரூஸ் மற்றும் நானும் தயார் செய்யப்போகிறோம். இதை செய்வது ரூஸின் சிந்தனை என்னுடையது அல்ல” என்று மோனோலிசா திங்கள்கிழமை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.