March 30, 2017 தண்டோரா குழு
தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகளுக்கு போதிய நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். காவேரி டெல்டா படுகையை பாலைவனமாக்கும் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் 17 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் போராடிய மாணவர்களை கைது செய்தனர்.