August 18, 2017 தண்டோரா குழு
விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் விரிவாக்கச் செயல்பாடுகள் தேவை என்று வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 83-வது அறிவியல் உழைப்பாளர்கள் மாநாடு பல்கலைகழக பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் இன்று நடைப்பெற்றது.
இதில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கு. ராமசாமி பேசுகையில்
விவசாயிகள் முன்னேற்றத்தில் வேளாண் விஞ்ஞானிகளும் விரிவாக்கத்துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றுவது முக்கியம் என வலியுறுத்தினார்.
அதன் பின்னர் பேசிய வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பேடி,
விவசாய பயிர் குறைதீர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான வேளாண் வழிகாட்டி மையங்களை நிறுவ வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், வேளாண் விளைநிலங்களில் வேளாண் பதன்செய் குறு ஆலைகள் நிறுவுவதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் அடையலாம் என்றும் தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வேளாண்மை, தோட்டக்கலை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.