November 4, 2017 தண்டோரா குழு
விவசாயிகள் மத்தியில் வாக்கு சேகரிக்க வரவில்லை சோறு சேகரிக்கவே வந்துள்ளேன் என்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகள் சங்க கூட்டத்தில் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து விவசாயிகள் கூட்டத்தில் பேசிய கமல்,
“உழவர்களுடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. நான் உழவன் மகன் அல்ல. உழவின் மருமகன்”. வேளாண்துறையை தொழில்துறையாக்கினால் தான் அனைவரும் வாழ முடியும்.பல ஆண்டுகளாக விவசாயிகளின் பெருமைகளையும் தொல்லைகளையும் கேட்டு வளர்ந்தவன்.
மேலும்,மற்ற மாநிலங்களில் விவசாய கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு மட்டும் ஏன் மறுக்கிறது.அரசியல்வாதிகள் தனியாக இருக்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள்,எல்லோரும் இந்நாட்டு மன்னார்கள் என கற்றுக் கொடுத்ததை மறந்துவிட்டீர்கள்.
5 லட்சம் ரசிகர்களை அனுப்புகிறேன் குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை செப்பனிட பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆறு, குளங்களை தெய்வமாக கும்பிடுங்கள்.பகுத்தறிவாளன் நானே கூறுகிறேன் என்றால் அந்த அளவுக்கு நான் பதறி போய் உள்ளேன்.ஒருவர் டெல்லியில் இருந்து என்னை தமிழ் பொறுக்கி என்றார்.நான் பொறுக்கி தான் அறிவு, ஞானம் வரும் போது பொறுக்கி என்பதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.என்று கூறினார்.