• Download mobile app
12 Jan 2025, SundayEdition - 3259
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற “இளைஞர் மாநாடு 2025”

January 11, 2025 தண்டோரா குழு

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டமும் தஞ்சாவூர், ஸ்ரீ இராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் மாநாடு 2025ஐ நடத்தியது.

இந்நிகழ்வில்,சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் V.காமகோடி சிறப்புவிருந்தனராகப் பங்கேற்று ” இந்தியா விஸ்வகுரு ஆவதற்கு நம் இளைஞர்களின் பங்கு ” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

அவர்தம் உரையில்,

“எதிர்வரும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாகத் திகழ்வதற்கு நம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஐக்கிய நாடுகள் அவை பதினேழு குறிக்கோள்களைப் பட்டியலிட்டுள்ளது என்றும் நம் நாடு வல்லரசு ஆவதற்கு அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அவற்றுள் நான்காவது குறிக்கோள் கல்வி குறித்து அமைந்துள்ளது என்றும் குறைந்த செலவில் தரமான கல்வியை அனைவருக்கும் தரவேண்டும் என்றும் கூறினார்.உலக அளவில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடாக நமது நாடு உள்ளது.

ஆனால் தேசிய அளவில் இருபத்தேழு விழுக்காடு மாணவ,மாணவியரே உயர்கல்வியில் சேர்கின்றனர். இதை உயர்த்த வேண்டிய பொறுப்பு தம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.கல்வி கற்கப் பொருளாதார வசதி தடையாகிவிடக்கூடாது. ஏழ்மையால் ஒருவரால் கல்வியை அடைய இயலவில்லை என்றால் அந்த ஏழை மாணவரிடம் நாம் கல்வியைக் கொண்டு சேர்ப்போம் என்று சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.

விவேகானந்தர் கூறியதை நாம் செயலாக்க வேண்டும் என்றும் வசுதைவ குடும்பகம் என்னும் உலகத்தை ஒன்றாகப் பார்க்கும் சிந்தனையை நம் பாரதம் உலகுக்கு வழங்கியது என்றும் குறிப்பிட்டார். நிலைத்தன்மை,தன்னிறைவு,தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவு ஆகியவை நம் நாட்டை வல்லரசாக்கும் வழிகள் ” என்று வலியுறுத்தினார்.

இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வே.சங்கீதா வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். தஞ்சாவூர் இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி விமூர்த்தானந்த மகராஜ், கேரளா கோயிலாண்டி இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி நரசிம்மானந்த மகராஜ் மற்றும் கத்தார் தோஹா வங்கியின் முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர். சீதாராமன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

சுவாமி விவேகானந்தர் வாசகர் வட்டத்தைச் சார்ந்த மரணவர் சி.எழில் நன்றியுறையாற்றினார்.விழாவின் நிறைவில் சுவாமி விவேகானந்தரின் வாசகங்களைக் கூறி மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர்.

மேலும் படிக்க