• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவேகாலயா கல்வி குழுமங்கள் சார்பாக அன்னையும் நானும் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி

May 5, 2022 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலையில் உள்ள விவேகாலயா கல்வி குழுமங்கள் சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு,அன்னையும் நானும் எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை திருச்சி சாலையில் உள்ள விவேகாலயா கல்வி குழுமங்கள் சார்பாக அன்னையர் தினத்தை முன்னிட்டு,அன்னையும் நானும் எனும் தலைப்பில் வரும் ஏழாம் தேதி சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.இதில்,விவேகாலய கல்வி குழுமங்களின் தாளாளர் பிரேமா ராவ்,இயக்குனர் ஐஸ்வர்யா,செயலாளர் நளினி மற்றும் பள்ளி முதல்வர் ஜானகி வேணுநாதன் ஆகியோர் பேசினர்.

கல்வித்துறையில் விவேகாலயா குழுமம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையை தொடர்வதை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும்,மேலும் விவேகாலயா குழுமங்களின் விச்சாரா வேர்ல்டு ஸ்கூல்,போதி அகாடமி, அக்‌ஷையந்திரா ஆகிய கற்றல் முறை பள்ளிகளின் செயல்பாடு குறித்து பேசினர்.

குறிப்பாக ஏற்கனவே இருந்து வரும் மாறுபட்ட கல்வி திட்டத்தோடு தொழில்முறை கல்வி பயிற்சியையும் மற்றும் வாழ்க்கைத் திறன்கள் செயல் திட்டத்தையும் சேர்ந்து கல்வி கற்றல் முறைகள் குறித்தும் மேலும் அனைத்து கல்வி மையங்களிலும் சமஸ்கிருத மொழி வகுப்புகளை அறிமுகம் செய்தது குறித்தும் பேசினர்.
மாணவர்களுக்கு கல்வி திறனோடு தென்னிந்திய தற்காப்பு கலைகளான சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயீற்றுவிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் கல்வித்துறையில் மாற்றத்தையும் சிறப்பான மேம்பாட்டையும் கொண்டு வருவதற்கு தேவையான புதிய வழிமுறைகளை விவேகாலயா கல்வி நிறுவனம் பின்பற்றி எதிர்கால மாணவ மாணவிகளுக்கு தொலை நோக்கு பார்வையுடன், கல்வியோடு சிறந்த வாழ்க்கை கல்வியையும் அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க