April 1, 2017
தண்டோரா குழு
இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் வெளிவந்த மாபெரும் பெற்றி படம் வேலை இல்லா பட்டதாரி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
கலைபுலி தாணு தயாரிப்பில் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். படத்தின் கடைசி நாள் சூட்டிங் இன்று நடைபெற்றது. அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சூட்டிங் ஸ்பார்டிற்கு வந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இதையடுத்து, சூட்டிங் ஸ்பார்டில் அமர்ந்து தனுஷ் நடிப்பை பார்த்த ரஜினி படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இப்படத்தில் சமுத்திரகனி, கஜோல், அமலா பால் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர்.