• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வி நிறுவனத்தின் ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டம் அறிமுகம்

July 1, 2022 தண்டோரா குழு

உலக எம்எஸ்எம்இ தினத்தை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான வி, தனது வி பிசினஸ் மூலம் எம்எஸ்எம்இக்கள் தங்களது திறன் வளர்ச்சியை வேகமாகப் பெற உதவும் வகையில் ரெடி ஃபார் நெக்ஸ்ட் எனும் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாக மாறியுள்ளது டிஜிட்டல்மயப்படுத்தல். அதே நேரத்தில், தொலைதூரப் பகுதிகளில் இருந்தவாறே பணியாற்றும் இக்காலத்தில் டிஜிட்டல் முறையில் வர்த்தகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதும் கடினம். இதை உத்தேசித்து, எம்எஸ்எம்இக்களின் டிஜிட்டல் பயணம் முழுவதிலும் உதவும் நோக்கோடு ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ திட்டத்தினை கட்டமைத்துள்ளது வி பிசினஸ். நிபுணர்களின் ஆலோசனைகளோடு உருவாக்கப்பட்ட இத்திட்டமானது, எம்எஸ்எம்இக்கள் அதிவேகமான வளர்ச்சியைப் பெற உதவும் அனைத்து சாத்தியமுள்ள தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

இம்முயற்சி குறித்து வி நிறுவனத்தின் தலைமை நிறுவன வர்த்தக அலுவலர் அரவிந்த் நெவாடியா பேசுகையில்,

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் எம்எஸ்எம்இக்கள், ஜிடிபியில் 30 சதம் பங்களிக்கின்றன. டிஜிட்டல் இந்தியாவை அமைப்பதிலும் புதிய ஐடியாக்களை வளர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றும் சிறு வர்த்தக நிறுவனங்களை அங்கீகரிப்பதில் பெருமைப்படுகிறோம்.

பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளுக்கு குறிப்பிட்ட தீர்வுகள், வலுவான தொழில்நுட்ப ஆதரவு, நிலையான வளர்ச்சிக்கு நம்பிக்கையான கூட்டு நிறுவனங்கள் தேவை. எம்எஸ்எம்இக்களின் எதிர்காலத்தைச் சிறந்ததாகக் கட்டமைப்பதிலும், அடுத்த கட்டத்தை அடைவதற்கான நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதிலும் எங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ’ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ அமையும். அவர்களது முடிவெடுக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்துவதையும், அவர்களது வர்த்தகம் எதிர்காலத்தில் சிறப்பாக அமையப் பெறுவதற்கான சரியான கவனம், செல்லும் திசை மற்றும் தீர்வுகளை அடையாளப்படுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த திட்டத்தின் மூலமாக 2,50,000 எம்எஸ்எம்இக்கள் அதிவேக வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.

வி பிசினஸ்இன் ரெடி ஃபார் நெக்ஸ்ட் திட்டம் இரண்டு அம்சங்களைக் கொண்டுள்ளது : டிஜிட்டல் சுய மதிப்பீடு மற்றும் பிரத்யேக எம்எஸ்எம்இ சலுகைகள்.

• ரெடி ஃபார் நெக்ஸ்ட் டிஜிட்டல் மதிப்பீடு:

டுன் அண்டு ப்ராட்ஸ்ட்ரீட் உடனான வி பிசினஸ்-ன் கூட்டுச் செயல்பாட்டினால் மேம்படுத்தப்பட்ட ஒரு தளமானது டிஜிட்டல்மயமாக்கத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இடைவெளிகளை அடையாளம் காணவும் எதிர்காலத்திற்கேற்ற ஒரு அமைப்பாக உருவாக்குவதற்கான தேவைகளை அடையவும் எம்எஸ்எம்இக்களுக்கு உதவுகிறது. டிஜிட்டல் வாடிக்கையாளர், டிஜிட்டல் பணிச்சூழல், டிஜிட்டல் வர்த்தகம் என்ற மூன்று அம்சங்களை வர்த்தக உரிமையாளர்கள் அமைப்பதற்கு உதவுகிறது ‘ரெடி ஃபார் நெக்ஸ்ட்’ மதிப்பீட்டு செயல்முறை. வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளல், சேவை அம்சங்கள், பணிச்சூழல் மற்றும் கட்டமைப்பு கண்காணிப்பு அம்சங்கள், வர்த்தக தரவு மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் தயார்படுத்தலையும் தொழில் துறை சூழலையும் இம்மூன்றும் விளக்கும்.

மேலும், டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கான பரிந்துரைகளையும் இவை வழங்கும்.https://www.myvi.in/business/enterprise-segments/smb/msme-readyfornext என்ற இணையதளத்தை தொடர்புகொண்டு வாடிக்கையாளர்கள் மேலும் விவரங்களைப் பெறலாம்.

• ரெடி ஃபார் நெக்ஸ்ட் பிரத்யேக எம்எஸ்எம்இ சலுகைகள்:

ஈடுபாடு, வளர்ச்சி, பாதுகாப்பு – இந்த மூன்று தூண்களின் மீது இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் தளத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருக்க, தங்களது வர்த்தகத்தை மேம்படுத்த, டிஜிட்டல் முறையில் பாதுகாப்பான வர்த்தகச் சூழலைப் பராமரிக்கச் சிறப்பான தீர்வுகளை வழங்குகிறது இத்திட்டம். இந்த கூட்டுச் செயல்பாட்டிற்கான ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்த, எம்எஸ்எம்இக்கள் டிஜிட்டல் தீர்வுகளை கைக்கொள்வதற்காக ரூ.20,000 மதிப்புள்ள ஒரு மதிப்பு பலனை விரிவுபடுத்தியுள்ளது வி பிசினஸ்

மேலும் படிக்க