• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வி நிறுவனம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க முடிவு!

April 7, 2022 தண்டோரா குழு

தொழில் மற்றும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒரு நக்க வேலை மற்றும் அந்த வேலையை சிறப்பாக செய்வதற்கு அவசியமான சிறப்பான திறன் மேம்பாடு ஆகிய இரண்டும் முக்கியமான காரணிகளாகும்.

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வி, பாரதத்தின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தேடுவதற்கும்,சரியான வேலையை தேர்வு செய்வதற்கும்,அரசு வேலைகளுக்கு தயாராவதற்கும் உதவும் வகையில் பல ப்ரத்யேக வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

தனது வாடிக்கையாளர்களின் லட்சியங்களை, இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம், ஒரு சிறப்பான எதிர்காலத்தை பெறமுடியும் என்பதால் வி வேலை மற்றும் கல்வி பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.இதன் தொடர்ச்சியாக பணிகளைத் தேடி கண்டறிய உதவும் இந்தியாவின் மிகப் பெரிய இணையதளமான அப்னா, ஆங்கிலம் கற்றுக் கொள்ள உதவும் மாபெரும் தளமாக இருக்கும் முன்னணி இணையதளமான என்குரு, மற்றும் அரசு பணி தேர்வுகளுக்கு தயாராவதற்கான நிபுணத்துவம் கொண்ட சிறப்பு இணையதளம் பரீக்ஷா ஆகியவற்றை வி வேலை மற்றும் கல்வி ஒருங்கிணைத்து உள்ளது.

முதல் கட்டமாக வி வேலை மற்றும் கல்வி, இந்தியாவில் உள்ள மிகப் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் தளத்தை இலக்காக கொண்டு, இளைஞர்கள் தங்களுக்கேற்ற வேலையை தேடும் வாய்ப்புகளையும், ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை மேம்படுத்தும் வாய்ப்புகளையும், அரசு பணிக்கான தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் வாய்ப்புகளையும் ஒரே தளத்தில் வழங்கும் வகையில் வி ஆஃப்-ல் வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் தங்களது பணி தொடர்பான கனவுகளை நிறைவேற்ற அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது.

இந்த தனித்துவமான முன்முயற்சி தொடர்பான அறிமுகம் குறித்து வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் சிஎம்ஓ, அவ்னீஷ் கோஷ்லா கூறுகையில்,

“வி-ன் பிராண்ட் வாக்குறுதியான, “நாளைக்காக ஒன்றிணைவோம்”, என்பதற்கு ஏற்ப, வாடிக்கையாளரின் அன்றாட வாழ்வில் உள்ள தேவைகளைப் பெறுவதில் இருக்கும் இடைவெளியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவதற்கு உத்வேகமளிக்கும் பங்களிப்பை எங்களால் வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டில் உள்ள இளைய தலைமுறையினரை பார்க்கும் பொழுது, அவர்களின் முக்கிய லட்சியம் என்பது ஒரு நல்ல வேலையை பெறுவதும், வேலை வாய்ப்புகள் அதிகமிருக்கும் வகையில் தங்களது திறனை வளர்த்து கொள்வதுமாகவே இருக்கிறது.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான திறன்கள் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன் இவையிரண்டும் அதிகம் உச்சரிக்கப்படும் அம்சங்களாக உள்ளன. மேலும் இந்த பிரிவைச் சேர்ந்த இளைஞர்களில் பெரும்பாலோனருக்கு, குறிப்பாக, 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் இருந்து வருபவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பை பெறுவது என்பது ஒரு முதன்மையான தேர்வாக உள்ளது. இந்த அம்சங்களின் அடிப்படையில், அப்னா, என்குரு மற்றும் பரீக்ஷா ஆகியவற்றுடன் இணைந்து வி வேலை மற்றும் கல்வி திட்டத்தை நாங்கள் ப்ரத்யேகமாக வடிவமைத்துள்ளோம்.

இந்த ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வுகள் வி வாடிக்கையாளர்கள் இன்று நிலவும் போட்டிகளை சமாளித்து தங்களது முயற்சிகளை சிறப்பாக மேற்கொள்ள உதவுவதுடன், அவர்களின் பணி தொடர்பான லட்சியங்களை பூர்த்தி செய்யவும், வாழ்க்கையில் முன்னேற்றம் காணவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.’’ என்றார்.

மேலும் படிக்க