• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வி நிறுவனம் சிறு மற்றும் நடுத்தர தொழில் பணிகளைமேற்கொள்ள கூகுள் வொர்க்ஸ்பேஸ்சை வழங்குகிறது!

October 25, 2021 தண்டோரா குழு

வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான வி பிஸினெஸ் நிறுவனம், கூகுள் கிளவுட் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொடக்க நிலை தொழில்களுக்கான (ஸ்டார்ட்-அப்ஸ்) வணிக தீர்வுகளை வழங்க உள்ளது.

வணிக நோக்கங்கள் மற்றும் பணியாளர்களின் பணியிடம் மற்றும் சூழல் அடிப்படையிலான சௌகரியம் ஆகியவற்றுக்கு இடையேயான சரியான சமநிலையை உருவாக்க கூகுள் மீட், ஜிமெயில், டிரைவ், ஷீட்ஸ், ஸ்லைட்ஸ், டாக்ஸ் மற்றும் காலண்டர் போன்ற பயனுள்ள செயலிகளை வி பிஸினெஸ் ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் வொர்க் ஸ்பேஸ் எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கும்.

இந்த கூட்டுச் செயல்பாடு, சிறு வணிகங்கள் மற்றும் அவற்றின் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இடையிலான பணியிடம் மற்றும் சூழல் தொடர்பான சௌகரியம் மற்றும் பணிகளைப் பாதுகாப்பாகவும் திறம்படவும் மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதாந்திர வாடகை கட்டணமாக ரூ.399-ல் தொடங்கி, வி பிஸினெஸ் ப்ளஸ் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்நேர கலந்துரையாடல் மற்றும் தொடர்பு கொள்வது, எடிட்டிங், தரவு இழப்பைத் தடுப்பது, தரவு பாதுகாப்பு, கோப்புகளின் தடையற்ற பகிர்வு, டிஜிட்டல் முறையில் கையொப்பமிடுதல் மற்றும் ஜிமெயில் செய்திகளை என்கிரிப்ட் செய்வது போன்ற அம்சங்களில் பல்வேறு திட்டங்களையும் கலந்தும் திட்டமிட்டும் அணுகலாம்.

இந்த கூட்டுச் செயல்பாடு மற்றும் சலுகைகள் குறித்து, வோடஃபோன் ஐடியா லிட் நிறுவனத்தின் தலைமை நிறுவன வணிக அதிகாரி, அபிஜித் கிஷோர் கூறுகையில்,

அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்தபடியே சௌகரியத்திற்கேற்ப பணியாற்றும் சூழல் அதிகரித்து வரும் இந்த உலகில், நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருவதால், மொபைல் பாதுகாப்பு, இருப்பிட கண்காணிப்பு, உற்பத்தித்திறன் மற்றும் பொழுதுபோக்கு போன்ற நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகளை வி பிஸினெஸ் பிளஸ் வழங்க திட்டமிட்டுள்ளது. கூகுள் வொர்க்ஸ்பேசின் கூகுள் கிளவுட் உடன் நாங்கள் மேற்கொண்டுள்ள இந்த கூட்டுச் செயல்பாடு, ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள வகையில் தொலைதூர பணியிட சூழல்களை திறமையாகவும் பாதுகாப்பாகவும் அணுகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொடக்க நிலை தொழில்கள் (ஸ்டார்ட் அப்ஸ்) ஆகியவற்றுக்கு இந்த வசதிகள் மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்துவதாக இருக்கும். ஏனெனில் அவற்றின் போக்குவரத்து, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு தேவைகளை கூடுதல் செலவில்லாமல் பெறலாம் என்றார்.

இது குறித்து கூகுள் கிளவுட் இந்தியாவின், பார்ட்னர்ஸ் அண்டு அலையன்சஸ் பிரிவின் தலைவர் அமிதாப் ஜாகோப் கூறுகையில்,

தொலைதூர வேலை சூழல்களில் கூட அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் உற்பத்தி மற்றும் பாதுகாப்பாக இருக்க உதவும் வகையில் கூகுள் வொர்க்ஸ்பேஸ் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தற்காலத்தில், எங்களது பங்குதார நிறுவனமான வோடஃபோன் ஐடியா நிறுவனத்தை இந்த சந்தைக்கு கொண்டு வருவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

நிறுவனங்கள் மற்றும் வேலை செய்யும் தொழில் வல்லுநர்களுக்கு பணி மற்றும் சூழலுக்கு ஏற்ற சௌகரியத்தையும், சுதந்திரத்தையும் வழங்குவதன் மூலம் அவர்கள் அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது எங்கிருந்தும் செயல்பட வைப்பதை – வி பிஸினெஸ் ப்ளஸ் திட்டங்கள் எளிதில் சாத்தியப்பட வைக்கின்றன, இதன் மூலம் வணிக உற்பத்தித்திறன் மற்றும் ஊழியர் நல்வாழ்வுக்கு இடையே சரியான சமநிலையை அடையவும் உதவுகின்றன.

மேலும் படிக்க