• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன் கைது- 25 பவுன் நகை மீட்பு

September 2, 2023 தண்டோரா குழு

கணபதி தெய்வநாயகி நகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் ஜெபஸ்தையன் என்பவரது மகன் ஆரோக்கியசாமி 56 இவர் தனது மனைவி மற்றும் பிரேம் மற்றும் ஸ்டீபன் மற்றும் இவர்களது மனைவிமார்கள் ஆகியோருடன் குடும்பத்துடன் வசித்து வருகிறார் இவர் பேக்கரி நடத்தி வருகிறார்.

இவரது இரு மகன்களும் வீட்டிற்கு தேவையான டைல்ஸ் மொத்த வியாபாரம் வெள்ளக்கிணறு பகுதியில் குடோனில் வைத்து செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 26ம் தேதி காலை தனது மனைவி மகன் ஸ்டீபன் மற்றும் இரு மருமகளுடன் சிவகங்கை உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை வியாபாரத்தை முடித்து அன்றைய வசூல் பணத்தை கொண்டு வந்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்து பூட்டி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து 28ம் தேதி அதிகாலை குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்த ஆரோக்கியசாமி வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் கோவை காவல் பணியாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கோவை கிழக்கு சரக உதவி ஆணையர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஆரோக்கிய சாமியின் உறவினரான சித்தாபுதூர்வை சேர்ந்த சவரிமுத்து என்பவர் மகன் மரியம் அமுதம் 37 என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 25 சவரன் தங்க நகை மீட்ட சரவணம்பட்டி காவல்துறையினர் மரியம் அமுதை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்துறையினர் மேலும் கணபதி வ உ சி நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மகன் கமலக்கண்ணன் 36 மற்றும் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது என்பவர் மகன் யூசப் 47 என்பவர்களையும் சிசிடிவி கேமரா பதிவுகளில் ஆய்வு மேற்கொண்டு காரமடையில் பதுங்கி இருந்தவர்களை கைது செய்து நகைகளை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் உதவி ஆணையர்,

பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை மேலும் வீட்டை பூட்டி விட்டு செல்லுபவர்கள் அருகில் உள்ள காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் முக்கியமாக தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் அதேபோல் தங்களது பகுதிகளை சந்தேகத்திற்கு இடமான நபர்களை கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க