May 29, 2023
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையம் முதல் அன்னைபிள்ளையார் கோவில் வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிவகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் மற்றும் கருப்பராயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மேயர் கல்பனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட பொறியாளாருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது உதவி கமிஷனர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம் மற்றும் பலர் உடனிருந்தனர்.