April 8, 2017 தண்டோரா குழு
சட்டீஸ்கர் வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மாவோயிஸ்டுகளின் LED குண்டு வெடித்து மோப்ப நாய் கிராக்கர் உயிரிழந்தது.
சட்டீஸ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் மொடக்பால் காவல் நிலையத்திற்குட்பட்ட வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் 170 பேர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணி முடிந்து தங்கள் முகாமிற்கு செல்லும் போது 2 கிமீ தொலைவில் உள்ள சின்ன கொடேபால் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த LED வெடிகுண்டை மோப்ப நாய் கிராக்கர் கண்டுபிடித்தது.
இதையடுத்து, கிராக்கர் அந்த குண்டின் அருகே சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்துள்ளது. இதில், கிராக்கர் பரிதாபமாக உயிரிழந்தது. கிராக்கரை கையாண்ட கான்ஸ்டபிள் காயங்களுடன் உயிர் தப்பினார்.
2005ம் ஆண்டு சிஆர்பிஎப் படையில் சேர்ந்த கிராக்கர் பல்வேறு சேவைகளை செய்துள்ளது. சட்டீஸ்கர்மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மோப்ப நாய்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.