September 25, 2017 தண்டோரா குழு
அமெரிக்க நாட்டிற்குள் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட 6 நாடுகளுகளுடன் தற்போது மேலும் 2 நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க குடியரசு தலைவராக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப், சிரியா, ஈரான், ஏமன், லிபியா, ஈராக், சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு நுழைய தடை என்று அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
தடை விதிக்கப்பட்ட நாடுகளில் முஸ்லிம் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். டிரம்பின் இந்த அறிவிப்புக்கு எதிராக எதிர் கட்சி அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன் இந்த உத்தரவுக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், வட கொரியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தடை என்று அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தடை வரும் அக்டோபர் மாதம் 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.