April 18, 2017 தண்டோரா குழு
வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது, அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்
“ மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில் தான் அதிகபட்சமாக 44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
வடதமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் 5 முதல் 6 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கும். வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.” என்றார் அவர்.