• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெற்றி உங்களுக்கு, கடன் யாருக்கு?

May 5, 2016 வெங்கி சதீஷ்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குப் பல முனைப் போட்டி இருப்பதாகக் கட்டப்பட்டாலும், போட்டி என்னவோ வழக்கம் போல் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவிற்குதான்.

இதனால் தேர்தல் அறிக்கை என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதில் ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

மேலும் கல்விக்கடன், விவசாய கடன் உள்ளிட்ட பல சலுகைகளை அறிவித்துத் தேர்தல் பந்தயத்தில் முன்னணியில் செல்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அதிக நாட்கள் செலவழித்து தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை விட அதிக சலுகைகள் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

மேலும் தி.மு.கவில் கூறப்பட்ட பல சலுகைகளும் அதில் இருந்தது. குறிப்பாக மீனவர்களுக்குச் சலுகை, விவசாய கடன் தள்ளுபடி, கல்விக் கட்டணம் தள்ளுபடி போன்றவை தான் அது.

ஆனால் பெண்களைக் கவரும் பல்வேறு விசயங்களான, இருசக்கர வாகனம் வாங்கப் பெண்களுக்கு 50 சதவிகித மானியம், குழந்தை பிறப்பிற்கு 18,000 ரூபாய், பால் விலை 25 ரூபாய், ஆனால் விவசாயிகளுக்கு மானியம், போன்றவையும்,

ஆண்களுக்குத் தொழில் துவங்க 25 சதவிகிதம் மானியம், வீட்டு மின்சாரம் முதல் 100 யூனிட் இலவசம், குழந்தைகளுக்குச் சத்துணவுடன் காலைச் சிற்றுண்டி, உள்ளிட்ட பல சலுகைகள்,

மாணவ மாணவிகளுக்குப் பழைய சலுகைகளுடன் இலவச இணைய வசதி, பள்ளி கல்வித் துறைக்கு மானியம், ஆங்காங்கே பயிற்சி மையங்கள் மற்றும் உடனடி வேலைவாய்ப்பு, போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்தச் சலுகைகளை கொடுக்க பணம் எங்கிருந்து வரும் என்பதைப் பற்றி எந்த வித அறிவிப்பும் இல்லை. அனைத்தும் சலுகைகளாக இருக்கிறதே தவிர வருவாய் அதிகரிப்பு பற்றி எந்தத் தகவலும் இல்லை.

இந்தத் தேர்தல் அறிக்கை எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரு நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது நிச்சயம். ஏற்கனவே தமிழகத்தின் நிதிநிலை அதிக வருவாயில் இருந்து கடன் வாங்கும் நிலை வந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு கட்சிகளும் சலுகைகளை போட்டிப் போட்டு அறிவித்து பின்னர் அதை நிறைவேற்ற மேலும் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டால் அது தமிழர்களான நமது தலை மீதுதான் விழும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆகா மொத்தம் வெற்றி இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு நிச்சயம், ஆனால் பின்னர் வரும் கடன் மட்டும் வாக்காளர்கள் குடும்பத்திற்கு என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் படிக்க