March 25, 2024 தண்டோரா குழு
கோவையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.
ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்னம் உள்ளனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில்,பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த ஒன்றை மாதங்களில் சென்று திரும்பியதில் ஐந்து பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன் விவரம் பின்பவருமாறு,
1.தமிழ்செல்வன்(24), 2.கிரண்(22),
3.சுப்பாராவ்(58),4.தியாகராஜன்(35),
5.பாண்டியன்(40)
இதையடுத்து,வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,இருதய நோய் சம்மந்தப்பட்வர்கள், மூச்சுதிணறல் உள்ளவர்கள், உடல்பருமணாக உள்ளவர்கள்,நீரிழிவு நோய் உள்ளவர்கள்,வயதில் மூத்தவர்கள்,
உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்தபின் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்,வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சாவலாக உள்ளது.இதனால் அனைவரின் நலன்கருதி மேற்கொண்ட அறிவுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது என வனத்துறை சார்பில் அறிக்கை வெயிடப்பட்டுள்ளது.