• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேக வேக பட்ஜெட் : ஜெயகுமார் தமாஷ்

March 16, 2017 தண்டோரா குழு

தமிழகத்தின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக படித்துக் கொண்டிருந்த அமைச்சர் டி.ஜெயகுமார் திடீரென்று குறிப்பிட்ட கட்டத்தில் வேகமாக உரையைப் படித்தார். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, “வேகமாகப் படிக்கிறேனா… “ என்று கேட்டுவிட்டு, “வேகமாக வாசிக்கவா, நிதானமாகப் படிக்கவா…” என்று கேட்டார்.

அப்போது, எதிர் தரப்பில் அமர்ந்திருந்த உறுப்பினர்கள் கேட்டதை அடுத்து, முந்தைய வேகத்தை விடக் கூடுதலான வேகத்துடன் பட்ஜெட் உரையின் சில பகுதிகளைப் படித்தார் அமைச்சர்.

இடைவிடாமல் உரையின் குறிப்பிட்ட சில பகுதிகளை அவர் படித்து முடித்ததும் ஆளும் தரப்பில் இருந்தோர் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

இடையில் பேசிய அமைச்சர், “சுவாரஸ்யமாக இருப்பதற்காக இப்படி படித்தேன்…” என்று கூறியதும் அவையில் அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.தொடர்ந்து பட்ஜெட் உரையை சாதாரண வேகத்துடன் அவர் படித்து முடித்தார்.

மேலும் படிக்க