April 13, 2017 தண்டோரா குழு
டாஸ்மாக் கடையை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களில் திறக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 154 கடைகளை மாற்று இடங்களில் திறக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் கடைகளை திறக்க கடும் எதிர்ப்புகளை தெரிவித்துபல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிழவி வருகின்றது.
இந்நிலையில்,கோவையில் செயல்பட்டு வரும் பொதுநல அமைப்புகள், பத்திரிகையாளர் சங்கங்கள், சமூக அமைப்புகள் என பல அமைப்புகள் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அம்மனுவில், “ ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்கவேண்டுமென்றும், ஏனென்றால் ஏதாவது ஒரு வேலைக்காக தினசரி மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவதால் டாஸ்மாக் கடைகள் இருந்தால் நல்லது என்கின்றனர்.
ஆகையால் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடைகளை திறக்கும் அதிகாரிகள் ஏன் அரசு அலுவலகங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது.” என மனுவில் குறிபிட்டுள்ளனர்.