• Download mobile app
04 Apr 2025, FridayEdition - 3341
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேலைக்காகத் தன்னையே விற்பதாக அறிவித்த இளைஞர்.

March 3, 2016 www.scoopwhoop.com

உலகளவில் தற்போது விலை கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. அதுவும் பல தொழிற்சாலைகள் உருவாகியும் அனைத்திலும் 75 சதவிகிதம் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது.

கடந்த காலங்களில் வேலை முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்புவது திருவிழா கூட்டம்போல் இருக்கும் ஆனால் தற்போது தனித்தனியாகச் சென்றால் கூட ஐந்து நிமிடத்தில் அனைவரும் கடந்து சென்றுவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது வேலைக்கு விண்ணப்பிப்பது என்பதே ஒரு கலையாக மாறிவருகிறது.

ரெஷும் எனப்படும் தன்னைப்பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும் விதத்திலேயே தான் மற்றவர்களை விட வித்தியாசமானவன் எனக் கட்ட பலர் முயற்சிக்கின்றனர். அதிலும் ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் ஒரு படி மேலே சென்று தனக்கு ப்ளிப்கார்டில் வேலை வேண்டும் என்பதற்காகத் தன்னையே விற்பனைப் பொருளாக விளம்பரப்படுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.ஐ.டி காரக்பூரில் படித்த ஆகாஷ் நீரஜ் மிட்டல் என்பவர் தனக்கு வேலை வேண்டும் என்பதற்காகத் தன்னையே ப்ளிப்கார்டில் விற்பதாக அறிவித்துப் பதிவு செய்துள்ளார். அதில் தனது திறமை மற்றும் தனது துறையில் உள்ள தனித்திறமை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு தேவையான ஆண்டு சம்பளம் இவ்வளவு எனக் குறிப்பிட்டுள்ளதோடு, பொருட்களைப் போல ஆயுட்கால வாரண்டி மற்றும் கேரண்டி கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது இதன் மூலம் தனக்கு வேலைக் கிடைக்கும் என நினைக்கவில்லை ஆனால் யாரையாவது இந்தப் பதிவு புன்னகைக்க வைக்கும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இது படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பலரை இழிவு செய்வதாக இருக்கிறது எனச் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு வந்துகொன்றுதான் இருக்கிறது.

மேலும் படிக்க