June 9, 2017
தண்டோரா குழு
கோவைவேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வுக்குரிய தரவரிசை பட்டியல் (சனிக்கிழமை) இன்று வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க கடந்த ஞாயிற்றுகிழமை இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது .இதனைத்தொடர்ந்து, தற்போது இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பிற்கு பெண்கள் 28,013 நபர்களும், ஆண்கள் 21,009 பேரும் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 49 ஆயிரத்து 23 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வுக்குரிய தரவரிசை பட்டியல் நாளை (சனிக்கிழமை) காலை11.00 மணிக்கு துணைவேந்தர் கு.ராமசாமி வெளியிடவுள்ளார்