• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘வைபை’ வசதியுடன் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள்

May 12, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC) சார்பில் பஸ்களில் தண்ணீர், வைபை ஆகிய வசதிகளுடன் மக்கள் எளிமையாக பிரயாணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படவுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் நகரிலிருந்து பல இடங்களுக்கு கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பயணிக்கும் மக்களின் பயணம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதற்காக வைபை மற்றும் தண்ணீர் வசதிகளுடன் பயணம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

KSRTC, NWKSRTC, மற்றும் NEKSRTC ஆகிய பஸ்களில் சிறந்த திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பயணிகள் பயன்படுத்த கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) அதிகாரி கூறுகையில்,

“KSRTC, NWKSRTC, மற்றும் NEKSRTC ஆகிய பஸ்களில் சிறந்த திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பயணிகள் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 17,௦௦௦ போக்குவரத்து பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் இலவச இணையதளம், மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கிய தொகுப்பை பெற்றுக்கொள்ள எங்களை தொடர்புக்கொள்ளலாம். ஒரு மாத காலத்திற்குள் இந்த புதிய திட்டத்தை அறிமுகபடுத்த வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம்”” என்றார்.

கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம்(KSRTC) நிறுவனத்தின் தலைவர், கே.கோபால பூஜாரி கூறுகையில்,

“ஏசி படுக்கை வசதிக்கொண்ட கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் பயணிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். அனைத்து முக்கிய பஸ் நிலையங்களில் மக்கள் 1 ரூபாய்க்கு 1 லிட்டர் குடிநீர் பெற்றுக்கொள்ள Reverse Osmosis (RO) என்னும் புதிய திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.

காலை 5 மணிமுதல் 11 மணிவரை ப்ரீமியம் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச செய்தித்தாள்கள் தரப்படும். அதேபோல் விமான நிலையம், பெங்களூர் கேம்பகோடா பேருந்து நிலையம், மைசூர் போகும் சாலையிலுள்ள செயற்கைக்கோள் பேருந்து நிலையம், பெங்களூரின் சாந்திநகர் மற்றும் மைசூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் பயணிகளுக்கும் செய்திதாள்கள் கொடுக்கப்படும்.

சுங்கச்சாவடிகளில் தானியங்கி கட்டணம் செலுத்த உதவும் ரேடியோ அதிர்வெண் 8400 KSRTC பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்துகள் சுங்கச்சாவடியில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்க முடியும்” ” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க